இஸ்மதுல் றஹுமான் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எப்.எம். றிஸ்வான் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
விஞ்ஞான பட்டதாரியான இவர் 20 வருட ஆசிரியர் சேவையிலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
அல் ஹிலால் மத்திய கல்லூரியில் உப அதிபராக கடமையாற்றிய இவர் அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றதை அடுத்து ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார்.
பிரபலயம் பெற்ற இரசாயணவியல் ஆசிரியராக அறியப்பட்ட இவர் நாட்டின் பல்வேறு இடங்களில் சேவையாற்றி
க.பொ.த. உயர் தரத்தில் இரசாயணவியல் கற்பித்ததன் மூலம் சமூகத்தில் கூடுதலான மாணவர்கள் வைத்திய, பொறியியல் மற்றும் விஞ்ஞான துறைகளுக்குச் செல்ல பாரிய பங்களிப்புச் செய்தவர்.
ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றியது மற்றுமன்றி தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்கள் என்பவற்றின் வலவாளராகவும் பணிசெய்துள்ளார்.
அத்தனகல்ல தொகுதி கஹட்டோவிட்ட, ஓகடபொளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரிஸ்வான் அங்கு பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையில் பல பொறுப்புக்களை ஏற்று நடத்தியவர்.
தற்போது நீர்கொழும்பில் வசித்து வரும் அவர் அல் ஹிலால் மாணவர்களின் ஒழுக்கத்திலும் கல்வியிலும் பாரிய பங்களிப்புச் செய்து பாடசாலை கல்வித் தரத்தை குறிய காலத்தில் இரட்டிப்பாக்குவதற்கான தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.