நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 25.06.2024 உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.
அதன்பிறகு, ஜூலை 9 ஆம் திகதி முறைப்பாட்டை மீண்டும் அழைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.