ஏ.எஸ்.எம்.ஜாவித்
நாட்டிற்கும் முஸ்லிம் சமுகத்திற்கும் ஒரு ஆலிமாக இருந்து சேவை செய்த மர்ஹம் மௌலவி கலாநிதி ஸலாஹத்தீன் (பாரி) அவர்கள் தொடர்பான நிகைவுப் பேருரையையும் இப்தார் நிகழ்வையும் கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
சங்கத்தின் தலைவர் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அல்ஹாஜ் அஹமட் முனவ்வர் தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை கிரேண்ட் செனித் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (15) நடைபெற்றது.
நிகழ்வில் வரவேற்புரையை சங்கத்தின் தலைவர் நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையை பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முதல்வர் அஸ்ஸெய்க் ஏ.சி. அஹார் மொஹமட் நிகழ்த்தினார் விசேட உரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து மர்ஹம் ஸலாஹத்தீனின் புதல்வர் முஸ்லிம் ஸலாஹ_த்தீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் ஆகியோர் சிறு உரைகளை நிகழ்த்தினர். நன்றியுரையை சங்கத்தின் செயலாளர் ஹிஸாம் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிருவாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், ஊடகவியாளர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது ஊடகவியலாளர் பரீத் இக்பாலினால் முக்கியஸ்தர்கள் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.


