நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 397 வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் 23.07.2025 புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பலியானார்.
குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த சுமார் 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீ பரலுக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.