ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.12.07
நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற கால நிலை காரணமாக கொழும்பு மாவட்ட மக்களும் பாரிய பாதிப்புக்குள்ளானார்கள்.
களனி கங்கையின் வெள்ள நீர் அதிகரித்ததால் களனி கங்கையை அண்டியுள்ள பல பிரதேசங்கள் முழுமையாக நீரில் மூழ்கின. குறிப்பாக வெல்லம்பிட்டிய பகுதியில் பல கிராமங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது.
வெள்ள நீர் காரணமாக இடம்பெயந்திருந்த மக்கள் தற்போது வெள்ள நீர் குறைவடைவதால் வீடுகளுக்குள் புகுந்த நீரும் குறைவடைந்துள்ளதால் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக வெல்லம்பிடி, மெக்கட கொலன்னாவ, கித்தம்பகுவ, சேதுவத்த, பிறண்டியாவத்த உள்ளிட்ட பல பகுதி மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று வெள்ளத்தால் அழிவடைந்த பொருட்களை பாவிக்க முடியாத நிலையில் இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தி தமது வீடுகளுக்கு முன்பாகவும், வீதிகளின் இரு பகுதிகளிலும் குவித்திருப்பதைக் காண முடிகின்றது.
இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல தொண்டு நிறுவனங்கள் தமது தொண்டர்களுடன் குறித்த பிரதேசங்களுக்குச் சென்று துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நிவாரணப் பொருட்களோ உதவிகளோ இன்றும் தமக்கு கிடைக்கவில்லையென தெரிவிக்கின்றனர்.













