நாட்டின் எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க ஆறு புதிய எரிபொருள் தொட்டிகளை நிறுவும் பணிகளைத் தொடங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தொட்டிகளின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
16.09.2025 நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
இதற்கிடையில், கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு முனையத்திற்கு இரண்டு புதிய குழாய்களை அமைப்பது குறித்தும் அவர் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.