நாடு முழுவதும் நேற்று (25) முன்னெடுக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 1,006 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 28,669 பேர் சோதனை செய்யப்பட்டனர். அதில் சந்தேகத்தின் பேரில் 1006 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்டர்கள் 31 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 378 பேரும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 223 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 63 பேரும், கவனயீனமாக வாகனம் செலுத்திய 20 பேரும், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,364 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.










