இஸ்மதுல் றஹுமான்
எமது நாடு முன்னேறினாலும் மீன்பிடி துறை முன்னேற்றம் அடையவில்லை. இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போல் இந்த வரவு செலவு திட்டத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவிந்த ஜயவர்தன சர்வதேச மீனவ பெண்கள் தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது போது தெரிவித்தார். சர்வதேச மீனவ பெண்கள் தினம் நேற்று முதன்முதலாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க நீர்கொழும்பு காரியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
சர்வதேச மீனவ சம்மேளனத்தின் 8வது பொதுச் சபைக் கூட்டம் கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற போது நவம்பர் 5ம் திகததியை சர்வதேச மீனவ பெண்கள் தினம் என பிரகடனப்படுத்தினர்.
அதன் அடிப்படையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பு காரியாலயம் என்பன இனைத்து இந்த நிகழ்வை நடாத்தினர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க பெண்கள் திட்ட ஒருங்கிணைப்பாலர் சுபாஷினி தீபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் டாக்டர் காவிந்த தொடர்ந்து உரையாற்றுகையில் மீனவர்கள் என்பவர் எமது நாட்டு மக்களை போஷாக்குள்ளவர்களாக ஆக்குகின்றனர். மீன் உண்பதனால் புரோட்டீன், விட்டமின்கள் பெற்று எதிர்புச்சக்தி அதிகரித்து
பலம் ஏற்பட்டு அன்றாட வேலைகளை செய்து நலமாக வாழமுடிகிறது.
மீனவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அது மிகவும் துன்பகரமான வாழ்க்கை. கடலுடன் மல்லுக்கட்டி மழையில் நனைந்து வெய்லில் காய்ந்து தமது பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு ஆழ்கடலில் வாழ்க்கையுடன் போராடுகின்றனர். இழுவைமடி படகுகளில் சென்று மாதக்கணக்கில் கடல் நடுவில் இருக்கின்றனர். சிறு படகுகளில் செல்பவர்களும் கஷ்டப்படடுன்றனர்.
தந்தை கடலுக்குச் செல்லும் போது தாய் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கணவனின் துன்பத்தைப் போக்க குடும்ப பாரத்தை பொறுப்பேற்று மீன் தட்டுகளில் வேலை செய்கின்றனர்.
எமது நாடு முன்னேறினாலும் மீன்பிடி துறை முன்னேற்றம் அடையவில்லை. 50-70 வருடங்களுக்கு முன்பிருந்த மீன்பிடி முறையே தற்போதும் உள்ளது. மீனவ சமூகமும் அன்று போல் இன்றும் துன்பப்படுகின்றார்கள்.
எக்பிரஸ் பேல் கப்பல், போட்சிடி, எண்ணெய் விலை ஏற்றம் என்பவற்றிற்கு எதிராக போராடினார்கள். தற்போது நடுக்கடலில் போராடுவது போல் நாட்டிற்குள்ளும் போராட வேண்டியுள்ளது.
இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போல் இந்த வரவு செலவு திட்டத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மீன்பிடி உபகரணங்களின் விலை குறைக்கப்பட வேண்டும்.தேவையான காப்புறுதி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். சுயதொழில் வேலைத்திட்டம் நடைமுறை படுத்துவது சிறந்தது.
மீனவ பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
சர்வதேச மீனவ பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில் மன்னார் காற்றாலை திட்டத்தை அப் பிரதேச மக்களின் அனுமதியின்றி செயல்படுத்த யுவதி இல்லை என அரசாங்கம் எடுத்துள்ள முடிவு மீனவ மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.










