நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார்.
அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தையிட்டி விகாரை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்றும், தையிட்டி விகாரைக்கு தனியான காணி இருந்தும் பொதுமக்களின் காணியில் அந்த விகாரை கட்டப்பட்டுள்ளதாகவும் நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










