2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்சமயம் 9000 சிறுவர்கள் நன்னடத்தை மையங்களில் உள்ளனர்” எனக் கூறினார்.
மேலும் மேற்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையான சிறுவர் அபிவிருத்தி மையங்கள் உள்ளன. எனவே, பெரும்பாலான சிறுவர்கள் மேற்கு மாகாணத்தில் உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.










