2024ஆம் ஆண்டு 36ஆம் இலக்க மின்சக்தி சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பொருத்தமான விதந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் வலுசக்தி அமைச்சின் செயலாளரால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவால் மின்சக்தி துறையின் முக்கிய பங்காளர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அறிவுப் பரிமாற்ற செயலமர்வுகளை நடாத்துவதற்கும், கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை எழுத்துமூலம் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 59 பங்காளர்கள் தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், மின்சக்தி துறையின் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக நிதி வழங்குகின்ற அபிவிருத்திப் பங்காளர்களைப் போலவே மின்சக்தி துறையின் மீள்கட்டமைப்பில் ஆர்வம் காட்டுகின்ற ஏனைய பங்காளர்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு விசேட நிபுணர் குழுவால் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள் உள்ளடங்கலாக இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய மின்சார சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.