தேர்வுகளில் தேர்ச்சி அல்லது தோல்வியின் அடிப்படையில் கல்வியை அளவிடப்படும் முறையை மாற்றுவதற்காக Modules முறை அறிமுகப்படுத்தப்படும்” – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வியை அடிப்படையாகக் கொண்டு கல்வியை அளவிடுவதற்கு நாம் பழகிவிட்டோம் என்றும், அந்த முறையை மாற்றுவதற்காக Modules முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த முறையின் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் கூறினார்.
2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தௌிவூட்டுவதற்காக கல்வி அமைச்சில் 23.07.2025 புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர், 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களுக்கும் தெளிவுபடுத்தினர்.