ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைக் கையாள்வது தொடர்பில் கூகுள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் சமூக ஊடகங்கள் ஊடாக தவறான தகவல்களைப் பகிர்வதற்கு எதிராக செயற்பட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.