தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரையை விடுத்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அரச நிறுவனங்களின் வாகனங்கள் குறித்த தகவல்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதற்கான விசேட படிவமும் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.