இஸ்மதுல் றஹுமான்
250 மில்லியன் ரூபா
பெறுமதியான பத்து கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த இலங்கையரை சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் இருந்து MH 179 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த பயணி சுங்க அதிகாரிகளுக்கு எதனையும் வெளிப்படுத்தாமல் வெளியேறும் முனையத்தின் ஊடாக செல்ல முற்பட்ட போது சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி அவரை பரிசோதனை செய்தபோது அவரின் பயணப் பொதியில் தேயிலை தூள் பக்கட்டுகளுக்குள் மறைத்து வைத்திருந்த ஐஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரான மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
அதில் 10.197 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் இருந்துள்ளது.அதன் சந்தைப் பெறுமானம் 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஊடாக பேச்சாளர் மேலும் கூறினார்.
தெமட்டகொடையைச் சேர்ந்த 35 வயதான நபரே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒபொபடைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.