தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கிப்பன் வகை குரங்கு ஒன்று உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த குரங்கு அதன் பெண் துணையுடன் கடந்த 2006ஆம் ஆண்டு செக் குடியரசிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
இதேவேளை இந்த குரங்கு கடந்த டிசம்பர் 17ஆம் திகதி திடீரென சுகயீனமுற்றதையடுத்து கால்நடை வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குரங்கிற்கான மரணப் பரிசோதனை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. எனினும், அது உயிரிழந்தமைக்கான துல்லியமான காரணம் குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










