தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘தேசிய மின்சக்தி கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால், 30 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களின் மின்சாரக் கட்டணம் 50 % – 300 % க்கும் இடைப்பட்ட வீதத்தினால் உயரும் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய வர்த்தக சபையின் பிரதி தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ,
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘தேசிய மின்சக்தி கொள்கை’ காரணமாக 90 யுனிட்களுக்கு குறைவாக மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோரின் மின் கட்டணம் 50 % – 300 % க்கும் இடைப்பட்ட வீதத்தினால் உயரும் என கூறியுள்ளார்.
30 யுனிட்களுக்கு குறைவாக மின்சாரத்தை பாவிக்கும் பாவனையாளர்களின் மின் கட்டணம் 305 % வீதமாக உயரும்
என சுட்டிக்கட்டியுள்ள அவர் தற்போது 30 யுனிட்டுக்கு குறைவான பாவனையாளர்களுக்கு 215 ரூபா கட்டணம் அறவிடப்படும் நிலையில் அவர்களிடம் 870 ரூபா கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படும் என கூறினார்.
அதிமாக மின்சாரத்தை பாவிக்கும் மின் பாவனையாளர்களிடம் அதிமாக அறவிடும் முறையும் குறைவான மின்சாரத்தை பாவிக்கும் மின் பாவனையாளர்களிடம் Cross-subsidy “குறுக்கு மானியம்” என்ற முறையில் குறைவாகவும் அறிவிடும் முறைக்கு மாற்றமாக அதிமாக மின்சாரத்தை பாவிக்கும் மின் பாவனையாளர்களிடம் குறைவாக அறவிடும் முறையும் குறைவான மின்சாரத்தை பாவிக்கும் மின் பாவனையாளர்களிடம் அதிகமாக அறவிடவும் பரிந்துறைக்கப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக சபையின் பிரதி தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ சுட்டிகாட்டியுள்ளார்.










