தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 4ஆம் திகதி இரவு 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விலங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து இந்தப் புறாக்கள் திருடப்பட்டதாக பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் திருட்டு அல்லது திருடப்பட்ட புறாக்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.










