கொழும்பு – 09, தெமட்டகொடை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையுடன் மத்திய கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளை இணைந்து, பெண்களுக்கு ஒழுங்கு செய்திருந்த “ஜனாஸா சட்ட திட்டங்களைத் தெளிவுபடுத்தும் மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு”, பேரவை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இவ்வருடத்திற்கான முதல் நாள் வழிகாட்டல் கருத்தரங்காக நடைபெற்ற இந்நிகழ்வில், 79 பெண்கள் இம்முறை பங்கேற்றிருந்தனர்.
பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் அப்துல் ஹமீத், பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில் ஆகியோரது வழிகாட்டலின் கீழ், வை.எம்.எம்.ஏ. மத்திய கொழும்பு கிளையின் சுகாதாரப் பணிப்பாளர் எம். இஸட். சித்தீக் தலைமையில் இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.
ஜனாஸா சட்ட திட்டங்களைத் தெளிவுபடுத்தும் விரிவுரையாளர்களான மௌலவி ஏ. முனாப் (முஅய்யிதி), முஅல்லிமா பாத்திமா ஸப்ரா முனாப் ஆகியோர், இவ்வழிகாட்டல் நிகழ்வுகளை நெறிப்படுத்தினர்.
ஒவ்வொரு மாதமும் வயது வித்தியாசமின்றி இலவசமாக நடாத்தப்பட்டு வரும் இக் கருத்தரங்குகளின் மூலம், தமது சுய விருப்பங்களின் பேரில் விண்ணப்பித்து இதற்காக முன்வந்துள்ள ஏராளமான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர் என்றும்,
ஜனாஸாவைக் குளிப்பாட்டல், கபன் துணி வெட்டல், கபனிடல் போன்ற செயற்பாடுகள் இங்கு பெண்களுக்கு விசேடமாகக் கற்றுக் கொடுக்கப்படுவதுடன், இதனால் பல பெண்கள் நன்மையடைந்து வருகின்றனர் என்றும், கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில் குறிப்பிட்டார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
15/02/2024.

