இஸ்மதுல் றஹுமான்
டுபாய் நாட்டில் தலைமறைவாயுள்ள அமைப்பு ரீதியான குற்றச்செயலில் ஈடுபடும் கெஹெல் பத்தரவினதும் தாகொன்ன பிரதேசத்தின் பாதால உலக உறுப்பினரான கிரிகொல்லா ஆகியோருடன் நெருங்கி உறவை பேனிவந்த ஒருவரையும் அவருடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரிவோல்வர் மற்றும் போதைப் பொருளுடன் இரு மோட்டார் சைக்கிள்களும் கைபற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் பரிசோதகர் சாமர பிரதீபுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நீர்கொழும்பு, குரண பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து தாகொன்னையைச் சேர்ந்த இத்தமல் முனசிங்க முதியான்சலாகே நெரன்ஜன் லக்மால் முனசிங்க எனும் 44 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வெளிநாட்டு ரிவோல்வர் ஒன்றும் அதற்குரிய 5 தோட்டாக்கள், 51 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைபற்றப்பட்டுள்ளன.
லக்மால் முனசிங்கவுடன் தொடர்புடைய பெண்ணான பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்கவை நீர்கொழும்பு நகரில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இப் பெண்ணிடமிருந்து ஹெரோய்ன் போதைப் பொருள் 8 கிராம் 215 மில்லிகிராம் கைபற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பிரதான நீதவான் ரகித்த அபேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார் லக்மால் முனசிங்கவை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடாத்த தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொண்டதுடன் செவ்வந்தி வீரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் பண்டார தல்வத்த மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றவியல் பாதால தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சாமர பிரதீப் ஆகியோரின் கண்கானிப்பில்
பொலிஸ் சார்ஜன்களான மன்சுல (60302), சந்திரரத்ன( 17739), பொலிஸ் கான்ஸ்டபல்களான கபில (883821), சின்தக்க(85297), அத்தநாயக்க (76177) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இவர்களை கைது செய்தனர்.

