இந்தியாவின் அயோத்தியின் சரயு நதிக்கரையில் வருடந்தோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீபோற்சவம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டும் ஞாயிற்றுக்கிழமை 19 முதல் 20 ஆம் திகதி வரை தீபோற்சவம் நடைபெறவுள்ளது. சுமார் 26 இலட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ட்ரோன்கள் பறக்கவிடுதல், லேசர் விளக்குகள், கலாசார நிகழ்வுகளும் களைகட்டும்.










