திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியுள்ள சந்தேகநபர் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உப்புவெளி காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள சந்தேகநபர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் வினவிய போது, சந்தேகநபர் மற்றுமொருவருடன் இணைந்து வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.