பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கொட்டும் மழையில் குட்டியை காப்பாற்ற ஓடிய தாய் நாய்!
மழை வெள்ளத்தில் குட்டி நாயை கவ்வியபடி ஓடிய தாய் நாயின் வீடியோ காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை முதல் சென்னையில் பிரதான பகுதிகள் மின்சாரம் இன்றி இருண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.