மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விரு நாடுகளிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதால், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் +66 812498011 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுமார் 200 இலங்கையர்கள் மியன்மாரில் தங்கியிருப்பதாகவும், மற்றொரு இலங்கையர் குழு தாய்லாந்தின் பேங்கொக்கில் தங்கியிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது