தர்கா நகர் – ரூமீ ஹாஷிம் கல்வி நிலைய (DSP) விஞ்ஞானப் பிரிவின் 24 ஆம்,25 ஆம் பிரிவு மாணவர்கள், வழமை போல் புனித ரமழானில் நடைபெற்று வரும் இப்தார் நிகழ்வை, இந்த வருடமும் மிக விமர்சையாக (30) சனிக்கிழமை தர்கா நகர் “இஷா அத்துல் இஸ்லாம்” சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நடத்தினார்கள்.
இந்நிகழ்வில், தர்கா நகர்(DSP) விஞ்ஞானப் பிரிவு மாணவ, மாணவிகளோடு, முன்னாள் மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், ரூமி ஹாஷிம் கல்வி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவருமான கலாநிதி அல்ஹாஜ் ரூமி ஹாஷிம், கல்வி நிலையத்தின் செயலாளர் அல்ஹாஜ் ஜெஸூக் அஹமட், மௌலவி மஸீர் அப்பாஸி, முன்னாள் அதிபர் நயீம், சிராஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி நிலைய உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )










