(எஸ். சினீஸ் கான்)
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கமு /திகோ/அன்னை சாரதா வித்தியாலயத்தில்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி.கோமளம் துளசிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் பியசேன கிருத்திகன் கலந்துகொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச கோட்டக்கல்வி பணிப்பாளர், திருக்கோவில் வலய ஆசிரியர் வள முகாமையாளர் உற்பட அதிகள் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
