எஸ்.எம்.ஜாவித் 2025.12.17
தமிழ் மொழியில் ஊடக அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்கான தமிழ் மொழியிலான விஷேட செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இரண்டாவது தடவையாக அரசாங்க தகவல் திணைக்கள புதிய கேட்போர் கூடத்தில் இன்று (17) இடம்பெற்றது.
இதன்போது AI நவீன தொழிநுட்பம் ஊடாக செய்தி அறிக்கையிடல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக பேராசிரியர் சஞ்ஜன கத்தொட்டுவ வளவாளராக கலந்து கொண்டு விரிவுரை வழங்கினார்.
இதன்போது அரசாங்க தகவல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் எல்.பி. திலகரத்ன, மேலதிக பணிப்பாளர் நாயகம் கே. பரந்தாமன் ஆகியோரும் பல அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.










