ஏ.எஸ்.எம்.ஜாவித் 2024.06.29
தமிழன் பத்திரிகையின் 4வது ஆண்டு நிறைவு விழா அறத்துடன் ஐந்தில் எனும் வாசகத்துடன் வெகு சிறப்பாக வெள்ளவத்தை ராமகிஷ்ண மிசன் மண்டபத்தில் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராசா தலைமையில் 28.06.2024 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக லிப்பட்டி பப்பிளிக்கேசன் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் திலித் ஜயவீர கலந்து கொண்டிருந்தார் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், றிஸாத் பதியுதீன்,எம்.ஏ.சுமந்திரன், இராதாக் கிருஸ்ணன் , வயம்ப மாகாண ஆளுனர் நசீர் அஹமட், ஜனகன் அறக் கட்டளையின் தலைவர் ஜனகன், அச்சு,இலத்திரணியல் மற்றும் இணையத்தள ஊடகங்களின் ஊடக நிறுவனத்தின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், கலை ஆர்வளர்கள்,தமிழன் பத்திரிகையின் ஊழியர்கள், அரச, தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள், பத்திரிகைளின் வாசகர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பெருந்திரலானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கல்வி,கலை, சமுக சேவை, எழுத்து மற்றும் பெண் ஆளுமைக்கான விருதுகள் என ஐந்துபேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர், சிறந்த மாணவி ஒருவருக்கு மடிக்கனணியும், கல்வி ஊக்குவிப்பு நிதித் தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு விசேட வினா பொதிகளும் வழங்கப்பட்டன.
இதன்போது தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராசா விசேடமாக கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய உயர் பீட உறுப்பினர்களும் பலராலும் பொன்னாடைபோர்த்தியும் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.