தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
நீண்டகாலமாக நிலவும் தபால் திணைக்கள ஊழியர்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜெயசுந்த தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், புதிய சேவையாளர் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.