கைரேகை வருகைப் பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான அரசாங்க முடிவுகளை தபால் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸ இன்றனநேற்று ஜெர்மன்(19) தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜயதிஸ்ஸ, குறுகிய கால வேலைநிறுத்தங்கள் கூட தபால் துறைக்கு நிதி இழப்பை ஏற்படுத்துவதாகவும், நீண்டகால வேலைநிறுத்தங்கள் கருவூலத்திற்கு பாரமாக அமைந்து, எதிர்கால சம்பளம் மற்றும் கூடுதல் நேர ஊதியங்களை பாதிக்கலாம் எனவும் எச்சரித்தார்.
தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு கண்டுவிட்டதாக ஜயதிஸ்ஸ கூறினார்.
எனினும், கைரேகை பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏற்க முடியாதவை. அவை பரிசீலிக்கப்பட மாட்டாது. கைரேகை பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில குழுக்கள் பல்வேறு அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்த முறையை ஏற்காதவர்கள் வேறு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளலாம்,” என்று அவர் கடுமையாக தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) முதல் தபால் ஊழியர்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கூடுதல் நேர ஊதிய மாற்றங்கள் மற்றும் கைரேகை வருகைப் பதிவு முறையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளடங்கும். இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் முக்கிய சேவைகளை பாதித்துள்ளது.