(அஷ்ரப் ஏ சமத்)
ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் காலம் சென்ற பாரதி இராஜநாயகத்தின் ஓர் ஆண்டு நினைவஞ்சலி 01.3.2026 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது…
இந்நிகழ்விற்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் விரகேசரி ஆசிரியர் எஸ் ஸ்ரீ கஜன் தலைமை வகித்தார்.
சிரேஷ்ட ஆனந்த பாலக்கிட்டனர், தினகரன் ஆசிரியர் செந்தில் வேலவர்,
முரசு பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாகரன் விரிவுரையாளர் தேவகௌரி,
அ நிக்சன், எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி செந்தில் நாதன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ) மனோ கணேசன் (பா.உ) செல்வம் அடைக்கலநாதன் (பா.உ) எம் ஏ சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி ) முன்னாள் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பலரும் முன்னாள் தினக்குரல் ஆசிரியர் இனிய பாரதி பற்றி உரையாற்றினார்கள்
அத்துடன் பாரதி ஒரு மனித நேய ஊடகன் எனும் நினைவு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டது. விசேட அதிதிகளுக்கு நூல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தில் சகல சமூகங்களும் இருந்து ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். கொலை செய்யப்பட்டார்கள். காயப்பட்டவர்கள். இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றனர் இவர்களுக்கு ஒரு ஜனாதிபதி கமிஷன் நியமிக்கப்பட்டது அவருக்கு நிவாரணம் மற்றும் அறிக்கைகள் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாரதி பற்றி உரையாற்றியவர்கள் கூறுகையில்….
பாரதி – ஓரு மனித ஊடகன்……40 ஆண்டு காலமாக பிறந்த மண்ணில் இருந்து தன் மக்களுக்காக பணிபுரியும் குறிக்கோளில் என்றும் திடமாகச் செயல்பட்டார் பாரதி
சக பணியாளர்கள் அனைவருக்கும் அன்பானவர் பாரதி அண்ணா இடது கையால் கணினியை இயக்கி ஊடக வரலாறு படைத்த சாதனையாளர் பாரதி
சிறப்புமிக்க பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய ஊடக ஆசான் பாரதி
உணர்வுகளை வெளிக்காட்டாத சலனமற்ற பாவனையுடன் சூழலை உள்வாங்கிய திறமையாளன் பாரதி எவருடனும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மைத் திறன் கொண்ட பாரதி நிறைகுட மாகத் திகழ்ந்த பெருமைகளின் நாயகன் பாரதி, ஊடக தர்மத்தின் அப்பழுக்கற்ற சாட்சியாய் இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய அற்புதம், செய்தி உலகம் வியந்து போற்றி வணங்கும் விஸ்வரூபம் பாரதி புரந்தார் கண்ணீர் மல்கும் முடிவைப் பெற்ற புருஷன் பாரதி பிரபஞ்சம் உள்ளவரை சிரஞ்சீவித்துவம் பெறும் அர்த்தமுள்ள பெயர் பாரதி இராஜநாயகம்










