இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணையின் பின் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரரை பிணையில் எடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு பிணை கோரப்பட உள்ளதாக மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.










