அஷ்ரப் ஏ சமத்)
அஷ்ரப் ஏ சமத் வெளிநாட்டு அமைச்சரிடம் நடைபெற்ற ஊடக மநாட்டில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில்
வெளிநாட்டமைச்சர் அவர்களே உங்களது வெளிநாட்டு அமைச்சு ஜிததாவுக்கான கவுன்சிலர் பதிவியை ஏன் முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை நியமிக்க முடிபு செய்தீர்கள். அது ஒரு முஸ்லிம்களுடைய புனித பூமி அப்பிரதேசத்தில் முஸ்லிம் அல்லாத எவரும் அனுமதிக்க மாட்டார்கள் ? முன்னாள் வெளிநாட்டு அமைசச்ர் அலி சப்றி கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரல் ஜிதத்தாவுக்கான கவுன்சிலராகவே நியமித்த வரலாறு ….
சவுதி அரேபியா ஜித்தா நாட்டுக்கான கவுன்சிலர் பதவிக்கு நாங்கள் ஒருபோதும். முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பதில்லை ஏற்கனவே அங்கு சவுதி அரேபியாவில் இலங்கையருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள அத்துறை சார்ந்த ஒருவர் நியமிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இப்பதவிக்கு எமது அரசாங்கம் ஒருபோதும் முஸ்லிம் அல்லாத ஓர் அதிகாரியை நியமிப்பதில்லை என முடிவு கடந்த வாரம் முடிபு எடுத்துள்ளோம். அத்துடன் உங்களது சமுகத்திலிருந்தும் அதற்கு பாறிய எதிர்ப்பு உள்ளது.
.
நீங்கள் சொல்வது போன்று அங்கு புனித பூமி முஸ்லிம் அல்லாதவர் ஒருவர் நியமிக்க முடியாது. அத்துறை சார்ந்த முஸ்லிம் ஒருவரையே எதிர்காலத்தில வெளிநாட்டு அமைச்சு நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.
யாரை நியமிக்கப் போகின்றீர்கள் ? அது உங்களுக்கு கூற முடியாது ?
இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் எனது கேள்விக்கு தமிழ் மொழி மூலம் வெளிநாட்டு பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திரா பதிலளிக்கும்படி வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத் வேண்டிக் கொண்டார்.
எனது இரண்டாவது கேள்வி பிரதியமைச்சர் அவர்கள் மறைந்த எம்.எச்.எம் அஷ்ரப் காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கல்முனையில் இயங்கி வந்தது அதனை கடந்த கால அரசு அம்பாறைக்கு கொண்டு சென்று விட்டனர். ஆனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அம்பாறை கரையோர பிரதேசங்கள் கூடுதலானோர் சம்பந்தப் படுகின்றார்கள். 400 ரூபா போக்குவரத்து, மொழிப்பிரச்சினை உள்ளது. ?
கல்முனையில் மீள அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா ?
அம்பாறையில் இருக்கின்றதை மீள கல்முனைக்கு கொண்டு வரமுடியாது கல்முனைப் பிரதேச மக்கள் பிரதிநிதி அல்லது அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தால் கல்முனையில் ஓர் அலுவலகத்தை திறக்க முடியும் பிரதியமைச்சர் அருன் பதிலளித்தார்.
இன்று (05.01.2026 – மு.ப 10.00 மணிக்கு வெளிநாட்டு அமைச்சில் அவரது அமைச்சின் கீழ் வருகின்ற -நிறுவனங்கள் முன்னேற்றம் பற்றி ஊடக மாநாடு நடைபெற்றது.
உள்ளக, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர்










