ஜா-எல, கொட்டுகோட பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் இருந்து ரூ. 25.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
5 உரப் பைகளில் அடைக்கப்பட்டிருந்த 129 கிலோ 245 கிராம் கேரள கஞ்சா, அந்த வீட்டிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொழும்பு குற்றப்பிரிவின் மாகாண ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பஸ்னாவே உள்ளிட்ட அதிகாரிகள் குழு, ஜா-எலவில் உள்ள ஏக்கல பகுதிக்குச் சென்றிருந்தனர்.
ஜா-எலவில் உள்ள கொட்டுகோட பகுதியிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் கூரை இல்லாத ஒரு பாழடைந்த வீட்டை ஆய்வு செய்தபோது, ஐந்து உரப் பைகளில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.










