ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது.
எனினும் சில விமான நிறுவனங்கள் சேவைகளை இரத்து செய்துள்ளதாகவும் சில விமானங்கள் தாமதமாக புறப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று ஸ்ரீநகரில் தரையிறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது










