ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் 16.02.2026 முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.