ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜய்கா என்ற ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவரான தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான செயலாக இருந்தாலும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை ஜய்கா நிறுவனத்தின் தலைவர் வரவேற்றுள்ளார்.
அதேநேரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம், இலகு தொடருந்து திட்டம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.