சிசி டி20 உலகக் கிண்ண (T20 World Cup Trophy) இலங்கைக்கான சுற்றுப்பயணம் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள காலப்பகுதியில், இந்த உலகக் கிண்ணக் கேடயம் நாட்டின் பல முக்கிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
இதன் மூலம் 2026 icc T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக, ரசிகர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேடயத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் போதும் இக்கேடயம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் போட்டியைப் பார்க்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இதனை நேரில் கண்டுகளிக்க முடியும்.
கொழும்புக்கு மேலதிகமாக, இந்த உலகக் கிண்ணக் கேடயம் கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.










