பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் டொலர் வாய்ப்பு உள்ளது என்றும், அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதே அதைவிட முக்கியமான விடயம் என்றும் அவர் மேலும் கூறினார். இப்போது முதலீடு செய்து இந்த மாற்றத்தில் பங்காளிகளாக மாறுபவர்கள் நாளைய வெற்றியாளர்களாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழல், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான பாதுகாப்பான சூழல் மற்றும் அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளை தனியார் துறைக்குத் திறக்க அனுமதிக்கும் புதிய கொள்கைகள் குறித்தும் அவர் இங்கு எடுத்துரைத்தார்.
Paytm இன் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் சேகர் சர்மா மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட உலகளாவிய நிபுணர்களுடனான கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் உலக வங்கி குழுமத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் கெவோர்க் சார்கிசியன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

September 18, 2025
0 Comment
112 Views









