இலங்கையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சொத்துவரியில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரில் ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 18.06.2024 முற்பகல் ஆற்றிய விசேட உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்கள் மீதான வரி அமுலாக்கப்படும்போது ஒரு நபர் பல வீடுகளைக் கொண்டிருந்தால் அவற்றில் ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும்.
இதன்மூலம் 90 சதவீதமானவர்களுக்கு வரி அமுலாக்கப்படாது.
எனவே இது தொடர்பாக நாட்டின் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.