

கொழும்பு15_மட்டக்குளி சேர் ராசிக்பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த புதன்கிழமை கல்லூரி அதிபர் திருமதி ஜி. ஃப்ரீடா கான் தலைமையில் முகத்துவாரம் ரொக் ஹவுஸ் இராணுவ மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு வடக்குத் கல்விப் பணிப்பாளர் திருமதி.தினுகா டி சில்வா,எச்.ஆர்.அறக்கட்டளையின் தலைவர் .எம்.ஜே.எம். ஃபரோஸ்,செரண்டிப் கல்வி அறக்கட்டளையின் உயர் அதிகாரி முஃப்தி ஹாசிம் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவில் “மினா” இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.முக்கியஸ்தர்கள் அமர்திருப்பதையும் மாணவர்களின் போட்டி இடம்பெறுவதையும் வெற்றிஅணிக்கு கிண்ணத்தை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
படங்கள்: எம்.எஸ்.சலீம்










