ஞாயிற்றுக்கிழமை இரவு செங்கடலில் பயணித்த சரக்கு தாங்கி கப்பலான மேஜிக் சீஸ் என்ற கிரேக்கக் கப்பல், அடையாளம் தெரியாத எட்டு படகுகளால் தாக்கப்பட்டு தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலையடுத்து, கப்பலில் இருந்த குழுவினர் கப்பலை கைவிட்டனர்.
முதலில் ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளால் (RPG) தாக்கப்பட்ட இந்தக் கப்பல், பின்னர் வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகுகளால் மேலும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம், பல மாதங்களுக்குப் பிறகு இப்பகுதியில் நடந்த முதல் கடுமையான தாக்குதலாக பதிவாகியுள்ளது.

July 7, 2025
0 Comment
8 Views