இஸ்மதுல் றஹுமான்
சூரிய மின் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்குவதாக கூறிய இந்த அரசாங்கம் "யூ டேன்" எடுத்து எரிபொருள் மாபியாவுக்கும் முதலில் யருக்கும்
அடிபனிந்துள்ளது என எதிர் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாஸ நீர்கொழும்பு, பெரியமுல்லையில் எம.ஜே.எம். ஆசிப், ஜினூஸ் சுல்தான் ஆகியோர்களை ஆதரித்து நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது போது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மக்கள் படும் அவலங்கள் துன்பங்களை மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு புரிவதில்லை. ஏமாற்றும் கலைக்கு தற்போதைய அரசாங்கத்திற்கு உலக கின்னத்தை வெள்ள முடியும்.
மக்கள் விடுதலை முன்னணி தொடர்பாக நம்பிக்கை வைத்த பெரும்பாலானவர்கள் இன்று விரக்தி அடைந்துள்ளனர்.
சூரிய மின் உற்பத்தி முறை பாவனையாளர்களுக்கு பெரும் நிவாரணமாகும். சூரிய மின் உற்பத்தி முதன்மை அளிப்பதாக கூறியே இந்த அரசு பதவிக்கு வந்தது. ஆனால் தற்போது ஒரு அளகுக்கு கூடுதலான கட்டணத்தை அறவிடும் முறைக்கே இந்த அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது.
அரசாங்கம் டீசல் மின் உற்பத்தி நிலையம், நிலக்கரி மின் உற்பத்தி அனல் மின் உற்பத்தி மாபியாவுக்கும் முதலாளிமாருக்கும் அடிபனிந்து அவர்களுக்கு சின்னக்கர சீட்டு எழுதிக்கொடுக்கும் அளவுக்கு தற்போதைய ம.வி.மு. அரசாங்கம் சென்றுள்ளது.
நான் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது மின் சக்தி அமைச்சர் அளிப்பதற்குப் பதிலாக கேள்வி மிக நீளமானது பதில் அளிக்க முடியாது என்றார். கேள்வி நீளமானது அல்ல பிரச்சினை அவர்களுக்கு பதில் அளிக்க முடியாது காரணம் சூரிய மீன் சக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக கடந்த தேர்தல் காலத்தில் மேடைக்கு மேடை அவர்கள் கூறினார்கள். தற்போது “யூ டேன்” எடுத்து எரிபொருள் மாபியாவுக்கும் முதலாளிமாருக்கும் அடி பனிந்துள்ளனர் எனக்கு கூறினார்.
எவ்வாறாயினும், நாட்டில் டீசல் மின் உற்பத்தி நிலைய அனல் மின் நிலைய மாஃபியாவுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், காற்று, சூரிய சக்தி, நீர் போன்றவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க சக்தியின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க சக்திக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் டீசல் மற்றும் அனல் மின்சாரத்திற்கு நன்மை பயக்கும் ஒரு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.