மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் மின் அலகுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 27 ரூபாவிலிருந்து 45.80 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.