நடப்பாண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்து அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம் 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில், இந்தியாவிலிருந்து 269,780 பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 124,652 பயணிகளும் ரஷ்யாவிலிருந்து 114,644 பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜூலை மாதத்தில் இதுவரை 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன.

July 27, 2025
0 Comment
4 Views