2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை இலங்கைக்கு பிரவேசித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
29.06.2024 பிற்பகல் இந்த எண்ணிக்கை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த போல் ரோய், இலங்கைக்கு 1,000,000வது சுற்றுலாப் பயணியாக வந்துள்ளதுடன் அவருடன் பெண் ஒருவரும் வந்துள்ளார்.
அவர்கள் 29.06.2024 மதியம் 12.40 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.