ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட விசா நீடிப்புகளை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யவில்லை என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது