ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.12.01
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் முழுமையாக பாதிப்புக்கு உள்ளான மக்களை மீட்டெடுத்து அவசர நலன்களில் உதவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவசர கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமய கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், இலங்கை வக்புசபை உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், பள்ளிவாசல்களின் சம்மேளன பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏனைய சமய அமைப்புகளின் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் முக்கிய பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர் இதேவேளை பிரதி அமைச்சரும் தன்னாலான முழு உதவிகளையும் உதவும் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தேவையில்லாமல் செல்ல வேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.










