சந்தையில் தற்போது மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சால மீனின் மொத்த விலை கிலோவுக்கு 750 ரூபா முதல் 800 வரையிலும், லின்னா கிலோவுக்கு 1,200 ரூபா வரையிலும், பலயா கிலோவுக்கு 1,000 ரூபா முதல் 1,200 வரையிலும், கெலவல்லா 1,500 ரூபாவாகவும், தலபத் 2,000 ரூபாவாகவும், தோர மீன் 3,000 ரூபா வரையிலும் விற்பனையாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.