எஸ்.எம்.ஜாவித்
2024.10.13
சீரற்சீரற்ற கால நிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். கொழும்பு மாவட்டத்திலும் வெள்ளம்பிட்டி பகுதியில் கித்தம்பகுவ கொலன்னாவ பகுதிகளில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு உள்ள நீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளதை இன்று அவதானிக்க முடிந்தது. பெற்றோர் பிள்ளைகளுக்கு உணவு தேடி அலைகின்றதையும் காண முடிகின்றது.